June 30th, 2008
அடுத்த நூறு நாட்களில் “பயனரின் பார்வையில் - உபுண்டு” என்ற புத்தகத்தை வடித்து பதிப்பித்து விநியோகிக்க உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்குரியவற்றை இயற்ற தன்னார்வலர்கள் தேவை. இதற்கென தனி மடலாடற் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
http://ubuntu-tam.org/mailman/listinfo/payanarin-paarvaiyil_ubuntu-tam.org
விருப்பமுள்ளோரை இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம். பாடங்கள் இயற்றுவதைத் தவிர்த்து உரிய பதிப்பகத்தாரை இனங்கண்டு கொடுத்தல், தேவையான நிதி சேகரிப்பில் , தன்மயமாக்கப் பட்ட வட்டு தயாரிப்பதில் உதவி, தமிழகம்/ இலங்கை மற்றும் பிற பகுதிகளில் விற்பனையின் பொருட்டு விநியோகிக்க திட்டமிட்டு செயற்படுத்துவதில் உதவி போன்ற காரியங்களிலும் உதவி தேவைப் படுகிறது.
Posted in உபுண்டு, குனு | No Comments »
June 15th, 2008
கணிமொழியின் இம்மாத இதழை உங்கள் முன்னே படைப்பதில் பெருமை கொள்கிறோம்.
OOXML ஐஎஸ்ஓ தரமாகும் பொருட்டு இந்தியா ஆதரவளித்திட மைக்ரோசாப்ட் மேற்கொண்ட முயற்சிகளால் தமக்கேற்பட்ட உளைச்சல்களை வெளிபடுத்திய மும்பய் ஐஐடி பேராசிரியரின் பதிவின் தமிழாக்கத்தோடு துவங்கும் இவ்விதழ் வாசகர் கருத்து, கடந்த மாத யுனின்ஸ் ஆயத்தக் கட்டுரையின் தொடர்ச்சி முதலியவற்றையும் கொண்டுள்ளது.
குனு லினக்ஸ் பயனர் குழுக்கள் பற்றிய எளிய அறிமுகத்தினை நம்முன்னே தந்துள்ளார் சீனிவாஸன். இங்கே வாசிப்பதை சற்றே இடைநிறுத்தி கணிமொழியின் இம்மாத இதழை வாசிக்க பயணியுங்கள். வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் மறவாது மடலிடுங்கள்.
http://kanimozhi.org.in
Posted in குனு | No Comments »
June 6th, 2008
கட்டற்ற மென்பொருளை பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு எடுத்தச் செல்ல ஓராண்டிற்கு இணைந்து ஒத்துழைக்க வல்லோரது உதவி தேவை.
பள்ளிகள் மட்டுமல்லாது மருத்துவம், விவசாயம், வங்கிகள், மொழியியல், அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய எல்லாத்துறைகளிலும் நம் நாட்டின் சூழல்களுக்கு ஏற்ப தொழில் ரீதியாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் பராமரிப்பு ஆதரவு நல்க உத்தேசித்துள்ளோம்.
அவற்றிற்கான பூர்வாங்கப் பணிகளிலும் ஒத்துழைப்பு நல்க விழைவோர் தேவை. உண்மையான தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திட உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன். கட்டற்ற மென்பொருளின் தேவையையும் அவசியத்தை உணர்ந்து எம்முடன் ஒத்துழைக்க விரும்பிடின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
Posted in உபுண்டு, குனு | 3 Comments »