Archive for the ‘நையாண்டி’ Category
கலைஞரும் கணபதியும்..
அடடா இப்போ திடீர்னு தோணிச்சு. நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தி. நாளை கலைஞர் தொ. கா உதயம். எங்கேயோ இடிக்குதே!
தேங்காய்க்கு நேர்ந்தக் கொடுமை..
தமிழ்நாட்டுல அதோட தலைநகரத்துல இருக்கேங்க. ஆனா பாருங்க கட்சி காரங்க வைக்கற டிஜிட்டல் பேனர் அப்பறம் சினிமா போஸ்டர், இதைத் தவிர பெரும்பாலும் பாக்கி எல்லா பேனர்களும் தமிழைத் தவிர மத்த எல்லா மொழியிலேயும் இருக்கும்.
ஆனா நேத்திக்கு ஒரு அதிசயம். சென்னை சென்ட்ரல் சிக்னலில் “U” முனையில் திரும்பியவனுக்கு ஒரு ஆச்சர்யம்.
நல்லா ஆயிரக்கணக்கான வாட்ஸ் வெளிச்சத்தில் பல பல்புகள் மின்ன.. மிகப் பெரிய டிஜிட்டல் பேனர். தமிழில்…
மகிழ்ச்சியோட விஷயம் என்னான்னு பார்த்தா..
“எங்க பாட்டி முடிய கட்டி மாட்டு வண்டி இழுப்பாங்களாம்! காரணம் அவங்க பயன்படுத்தினது தேங்காய் எண்ணெய்!”
அதனால நான் பயன்படுதறதும் தேங்காய் எண்ணெய்ன்னு கூந்தலும் சீப்பும் சகிதமாக பேத்தி போஸ்கொடுக்கறாங்க!
அடப் பாவத்தே! இதைச் செய்யறத்துக்கு கோகனட் ப்ரொமோஷன் போர்டுன்னு ஒன்னு. விவசாய அமைச்சரவையின் கீழே!
ஆகா! தேங்காய்க்கு இப்படி ஒரு வாழ்வா! நடக்கட்டும் நடக்கட்டும்! பிரைல் கிரீம் பூசும் இளைஞர்களே! கிளினிக் ப்ளஸில் குளிக்கும் இளைஞிகளே!
சேதி கேட்டீங்களா! அற்பனுக்கு வாழ்வு வந்தா…
பி.கு: ஒரு சந்தேகம். இப்படி எல்லாம் இவ்ளோ பெருசா பேனர் வைக்க எவ்ளோங்க செலவு பிடிக்கும்?