ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for the ‘கருத்து’ Category

தணிக்கை செய்யப்படணுமா சின்னத்திரை?

with 6 comments

வெளிவரும் சினிமாக்களை தணிக்கைத் துறையினர் முன்னமே பார்த்துவிட்டு U – A – U/A சான்றுகள் அளிப்பது போல் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டுமா? தணிக்கை நடக்கிறதா?

அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம்?

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 29th, 2009 at 8:21 pm

தற்சார்புடைமை???

without comments

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முதற் கட்டங்களை கடந்து கடைசி கட்டங்களுக்குள் புகவிருக்கும் இச்சூழலில் – தற்சார்புடைமைக்கு ஏற்றதாக ஏதேனும் ஒரு கட்சியாவது குரல் கொடுக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். எங்களுக்கு வாக்களியுங்கள் – உங்களுக்கு இதைச் செய்கிறோம் எனச் சொல்லும் எல்லாக் கட்சிகளின் குரல்களும் – ஒரு விதத்தில் – ஒரு மையத்திலிருந்து அதிகாராத்தை செலுத்தவே விரும்புகின்றன.

தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகக் கூறப்படும் ஜனநாயக அமைப்பின் கீழ் வரும் ஒரு பகுதியில் பயங்கர வெள்ளம் ஏற்படும் போது – தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளும் வலிமை கூட அற்றோராக – நாமே தேர்வு செய்த மைய அதிகார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஏந்திகளாக வாழ்கிறோம் என்பது தான் உண்மை. ஒரு நாடு – ஓர் அரசு என்பது அதிகாரத்ததை தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளதே தவிர எதிர்பார்த்தது போல் – அனைவருக்கும் பகிர்ந்தளித்திடவில்லை.

டில்லியில் இருந்து கொண்டு சென்னையில் வாழும் என்னை கட்டுப்படுத்தி – அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பை தேர்வு செய்திடும் பொருட்டு – வாக்களிக்க நான் விரும்பவில்லை. அதாவது என்னை தன்னை அண்டி வாழ வைக்கும் ஒரு அமைப்பை தேர்வு செய்ய நான் விரும்பவில்லை. சென்னையில் இருந்துகொண்டு கன்யாகுமரியில் வாழ்வோரைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கும் இது பொருந்தும். மக்கள் – ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை எல்லாவற்றிற்கும் அண்டி வாழ்வது ஜனநாயகமாகாது. மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதே அரசாங்கத்தின் பங்கு.

தற்சார்புடையோராய் – தற்சார்புடைய பல்வேறு குழுக்களைச் சார்ந்தோராய் – அதே நேரம் ஒற்றுமையை எப்பொருட்டும் விட்டுக்கொடுக்காத – பரவலாக்கப்பட்ட முறையே நான் காண விரும்புவது. இக்குழுக்கள் நம்நாட்டில் குடும்பத்திலிருந்து தொடங்குகின்றன.

இன்றைய நாடாளுமன்ற முறை அத்தகையதாக தோன்றவில்லை. ஆனால் அதற்குள் இருந்துகொண்டு தான் அதைக் களைய வேண்டுமோ? காலம் விடைச் சொல்லும்..

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 25th, 2009 at 7:30 am

தேர்தலும் கிரிக்கெட்டும்

with one comment

ஐபிஎல் போட்டி ஒத்திப்போடப்பட வேண்டும் என்பது சரிதான். தேர்தலுக்காக பல காரியங்கள் முன்கூட்டியோ பின்னரோ செய்யப்படுகின்றன. பிள்ளைகள் எழுதும் பரீட்சை – அவற்றிற்கான முடிவு எனப் பல துறையை சாரந்தவரகளும் தேர்துலுக்காக தங்களை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். இதில் ஐபிஎல்லின் பிடிவாதம் புரளும் – புரளப்போகும் பணமும் அதை விட்டுக்கொடுக்க மனசில்லாமலும் போடப்படும் சண்டையாகவே தோன்றுகிறது. இதற்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியத் தேவை இல்லை. போகட்டும் ஐபிஎல் நடக்கட்டும் தேர்தல்.

ஆனால் நம்ம நாட்டில் உள்ளாட்சி – மாநிலம் – மக்களவை என இருக்கும் மூன்று தேர்தல் முறையால் ஏற்படும் தண்டச் செலவு ஏராளம்.

  • Share/Bookmark