Archive for the ‘சிந்தனை’ Category
தற்சார்புடைமை இயக்கம்..
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாமிட்டிருந்த ஒரே பதிவு தற்சார்புடைமை பற்றியது. இது என்னவென்று என்னாலேயே இப்போதைக்கு விரிவாக விவரிக்க முடியாது. இதனை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுத்து தோன்றத் தொடங்கியுள்ளது.
இதன்பொருட்டு நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவ்வப்போது நான் சில நண்பர்களிடம் சொல்லி வரும் கருத்தையே முன்வைக்க முடியும்.
டில்லியில் இருக்கும் அதிகார மையத்திற்கு வரி செலுத்துவதென்பது சம்பாதிக்கத் தொடங்கி வருமான வரி கட்டத் தொடங்கியதிலிருந்து ஒரு வித உறுத்தலாகவே இருந்து வருகிறது. அதற்காக அங்கிருக்கும் மக்களும் எம்மக்கள் தான். அதே போல் தென் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு சென்னையில் இருக்கும் அதிகார மையத்திற்கு கட்டுப்படவும் விரும்பவில்லை.
மாறாக எனது அடிப்படைத் தேவைகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும் மிகச் சிறிய நிர்வாக அமைப்பிற்கு எமது பங்களிப்புகள் இருக்க வேண்டும். பொதுவான நன்மைகளுக்காக அவ்வமைப்பு சென்னைக்கும், தேசம் முழுமைக்குமான பொதுவான நலனுக்கா சென்னை தில்லிக்கும் பங்களிக்க வேண்டுமே ஒழிய, தனி மனித/ அமைப்புகளிடமிருந்து பிடுங்கப்பட்டு பின்னர் ஆள்வோரது கரிசனத்தில் காலதாமதமாட்டு திரும்பக் கிட்டச் செய்யும் முறை மாற வேண்டும்..
இச்சிந்தனையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். ம்ம்ம்… இப்போதைக்கு மனதில் ஊன்றத் தொடங்கியுள்ள சிந்தனை இது..
பி.கு: மாநில சுயாட்சி போன்ற கருத்துக்களின் ஆழம் அறியேன். அவற்றுடன் இவ்வெண்ணம் எவ்வளவு ஒத்துப்போகும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.