ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for the ‘துக்கம்’ Category

மனச் சஞ்சலம் :-(

with one comment

இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எமது அண்ணனை கால் சிகிச்சைக்காக சித்தூருக்கு அம்மா அழைத்துச் சென்றிருந்தார். நான் வடலூரில் மாமா வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தேன். எட்டு வயது? விடுதலை வரலாறு – காந்தி – நேரு பற்றியெல்லாம் கதைக் கேட்டு காங்கிரஸ் மீது பள்ளிப் பிராயத்திலே பலத்த அபிமானம் இருந்ததுண்டு… இராஜீவ் கொல்லப்பட்டதாகவும் சித்தூரில் நிலைமை சரியில்லை எனவும் எமக்கு தெரிவிக்கப்பட்ட தருணம் இன்றும் நினைவில் இருக்கிறது.

துன்பமான நினைவு.. நாளை மறுநாளோடு பதினெட்டு வருடங்கள்..

இலங்கை இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் மடிந்த வேலுப்பிள்ளை பிராபாகரனின் மரணச் செய்தி மனச் சஞ்சலப்படுத்தும் நிகழ்வாகும்.

பல்வேறு காரணங்களுக்காக வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கு மரணந்தான் தீர்ப்பாககக் கூடும் என்று நினைத்ததுண்டு. அதுவே இன்று ஏற்பட்டும் விட்டது. ஆனால் ஓசாமா பின்லேடன், அல்கொய்தா, தாலிபான் அமைப்புகளுடன் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது கண்டிக்கத் தக்க செயல்.

வேலுப்பிள்ளை பிரகாகரனின் மரணம் – மனச் சஞ்சலம். அவரது தோற்றத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு கிடைத்திடவில்லை. ஆனால் அவர் பெற்றது – தக்கது.

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

May 19th, 2009 at 4:11 pm