ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for the ‘சமூகம்’ Category

சாத்தான்களும் தேவதைகளும்…

with one comment

“ஏஞ்சல்ஸ் & டேமோன்ஸ்” படிக்க வேண்டும் என நினைத்து வாங்கி வைத்த புதினம்! உரக்கமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது – வருடக் கணக்கில்! அமேரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் நண்பனுடன் முந்தா நாள் இரவு சத்யத்தில் தோன்றியது!

பாப்பரசரை கொன்று கார்டினல்களோடு சேர்த்து வாட்டிகனையே ஒழிக்க அறிவியக்கத்தார்(?) தீட்டிய திட்டம். பேராசிரியர் (பாத்திரத்தின் பெயர் நினைவில் நிற்கவில்லை) ஒருவர் திட்டப்படிகளை படிப்படியாக தகர்க்க நிகழ் நேரத்தில் திட்டங்களை தன்னைகாட்டிக் கொடுத்திடாத படி திசை திருப்பி காய் நகர்த்தும் கொலைக் கூட்ட தலைமகன்.. யாராக இருக்கும் என்ற பரபரப்பு கடைசி வரை இருந்து அப்பாடா இவன் தானா! ஒழிந்தான்! என்றிருக்க, அவனில்லை – இந்த் பூனையும் பால் குடிக்குமா எனும் படிக்கு பதிவொளியில் படம்பிடிக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்படும் கயவன்.

அடடா! யாருன்னு சொல்லிட்டா நீங்க படம் பார்க்கணும் தானே!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 3rd, 2009 at 10:48 pm

தணிக்கை செய்யப்படணுமா சின்னத்திரை?

with 6 comments

வெளிவரும் சினிமாக்களை தணிக்கைத் துறையினர் முன்னமே பார்த்துவிட்டு U – A – U/A சான்றுகள் அளிப்பது போல் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டுமா? தணிக்கை நடக்கிறதா?

அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம்?

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 29th, 2009 at 8:21 pm

தற்சார்புடைமை???

without comments

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முதற் கட்டங்களை கடந்து கடைசி கட்டங்களுக்குள் புகவிருக்கும் இச்சூழலில் – தற்சார்புடைமைக்கு ஏற்றதாக ஏதேனும் ஒரு கட்சியாவது குரல் கொடுக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். எங்களுக்கு வாக்களியுங்கள் – உங்களுக்கு இதைச் செய்கிறோம் எனச் சொல்லும் எல்லாக் கட்சிகளின் குரல்களும் – ஒரு விதத்தில் – ஒரு மையத்திலிருந்து அதிகாராத்தை செலுத்தவே விரும்புகின்றன.

தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகக் கூறப்படும் ஜனநாயக அமைப்பின் கீழ் வரும் ஒரு பகுதியில் பயங்கர வெள்ளம் ஏற்படும் போது – தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளும் வலிமை கூட அற்றோராக – நாமே தேர்வு செய்த மைய அதிகார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஏந்திகளாக வாழ்கிறோம் என்பது தான் உண்மை. ஒரு நாடு – ஓர் அரசு என்பது அதிகாரத்ததை தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளதே தவிர எதிர்பார்த்தது போல் – அனைவருக்கும் பகிர்ந்தளித்திடவில்லை.

டில்லியில் இருந்து கொண்டு சென்னையில் வாழும் என்னை கட்டுப்படுத்தி – அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பை தேர்வு செய்திடும் பொருட்டு – வாக்களிக்க நான் விரும்பவில்லை. அதாவது என்னை தன்னை அண்டி வாழ வைக்கும் ஒரு அமைப்பை தேர்வு செய்ய நான் விரும்பவில்லை. சென்னையில் இருந்துகொண்டு கன்யாகுமரியில் வாழ்வோரைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கும் இது பொருந்தும். மக்கள் – ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை எல்லாவற்றிற்கும் அண்டி வாழ்வது ஜனநாயகமாகாது. மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதே அரசாங்கத்தின் பங்கு.

தற்சார்புடையோராய் – தற்சார்புடைய பல்வேறு குழுக்களைச் சார்ந்தோராய் – அதே நேரம் ஒற்றுமையை எப்பொருட்டும் விட்டுக்கொடுக்காத – பரவலாக்கப்பட்ட முறையே நான் காண விரும்புவது. இக்குழுக்கள் நம்நாட்டில் குடும்பத்திலிருந்து தொடங்குகின்றன.

இன்றைய நாடாளுமன்ற முறை அத்தகையதாக தோன்றவில்லை. ஆனால் அதற்குள் இருந்துகொண்டு தான் அதைக் களைய வேண்டுமோ? காலம் விடைச் சொல்லும்..

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 25th, 2009 at 7:30 am