Archive for July, 2007
குனுசென்ஸ் <--> கோபுண்டு
ம்ம்ம்.. கோபுண்டு வருதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அதன் மேலுள்ள வாஞ்சை வளர்ந்து கொண்டே போகுதுங்க.. என்ன செய்ய.. சரி… முற்றிலும் கட்டற்ற மென்பொருளாலான இயங்குதளம் எப்படி இருக்குமுன்னு பாக்கலாமுன்னு குனுசென்ஸ் பதிவிறக்கி நிறுவினேன்!
சல்லுன்னு போச்சு! இன்னும் தமிழ் வசதியெல்லாம் செய்யல! நிறுவிய கையோடு எழுதறேன்! நல்லாயிருக்கு…பெரிய வித்தியாசம் இல்லை! நுணுக்கமாக பார்த்தா தெரியுமுன்னு நினைக்கறேன்!
சுகத்தோடு சுதந்திரமும்…
கோபுண்டு வரும் நாளை நோக்கி!
நீங்க ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயரா?
இன்னிக்கு பெரும்பாலான நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு விஷயம்! நாங்கள் ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயர்..
அட இதுக்கு அர்த்தம் என்ன? தகுதியும் திறமையும் இருக்கும் யாரும் எங்கள் நிறுவனத்தில் சேரலாம்!
அப்டீன்னா! அட! இன்னும் புரியலயா? நீ ஆணா! பெண்ணா! அலியா! எனக்கு கவலையில்லை!
தேவரா! கவுண்டரா! ஐயரா! பிரச்சனையில்லை! சைவமா! வைணவமா! முஸ்லீமா! கிறிஸ்தவரா! பேதமில்லை!
சபாஷ்! சூப்பர்! அப்பறம்!
கருப்பா சேப்பா! என்ன நிறமா இருந்தாலும் ஏத்துக்கிடுவோம்! நீங்க வாலிபரா வயசானவரான்னு கூட பாக்க மாட்டோம்!
கூல்!
ஊனமா இருந்தாலும் ஊனாவே இருந்தாலும் ஊஹூமுன்னு சொல்லமாட்டோம்!
பலே! மேலேச் சொல்லுங்க!
வேறென்ன! நீங்க ஆந்திராவா, கேரளாவா, அமேரிக்காவா, ஆப்பிரிக்காவா! எதைப் பத்தியும் பொருட்படுத்த மாட்டோம்! திறமையிருந்தாப் போதும்!
நல்லதுங்கையா! ஆக பால், சாதி, மதம், நிறம், வயது, சுகவீனம், மாநிலம், தேசம் எதையும் நீங்க பார்க்கறது இல்லை! அப்படித்தானே!
ஆமாம்! ஆமாம்! யூ ஸீ! வீ ஆர் ஆல்வேஸ் ப்ராட் மைன்டெட்! இட்ஸ் ஆல் பிகாஸ், வி ஆர் குளோபல் சிட்டிசன்ஸ்! அவர்ஸ் இஸ் ய குளோபல் இகானமி!
சரிங்க! என் பேர்! பிச்சுமணி! சகலமும் தெரியும்! நல்லா படிச்சு நிறைய பேருகூட பழகி பேரு வாங்கியிருக்கேன்!
திறமைக்கும் குறைவில்லை! வாய்ப்புக் கொடுத்தீங்கன்னா நிரூபிச்சு காமிப்பேன்! சின்ன விஷயம் ஆங்கிலம் மட்டும் சரியா வரமாட்டேங்குதுங்க!
வாட்! வாட்! யூ கான்ட் ஸ்பீக் இங்க்லீஷ்! வாட் வில் வி டூ வித் சம் ஒன் ஹூ கேனாட் கம்யூனிகேட்! ஓய் தெ ஹெல் டிட் யூ கம் ஹியர் தென்! கெட் லாஸ்ட்!
என்னங்கையா இப்படி சொல்றீங்க! இத்தன நேரம் உங்க கூட நல்லாத் தானே பேசிக்கிட்டிருந்தேன்! எல்லாம் புரிஞ்ச மாதிரி தலைய தலைய ஆட்டினீங்களே! நீங்க வேற ஏதோ ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயர் அது இதுன்னு சொன்னீங்க! இப்ப ஏதோ புதுசா சொல்றீங்களே என்னையா நியாயம்!
வாட்! நான்சென்ஸ் ஆர் யூ ஸ்பீகிங்! ஐ செட் யூ கெட் லாஸ்ட் வித் அவுட் வேஸ்டிங் மை டைம்! ஐ டோன்ட் வாண்ட் டூ எம்ப்ளாய் சம் ஒன் ஹூ கேனாட் கம்யூனிகேட்! ஷிட்!
சென்னையையைச் சுற்றி – கட்டற்ற மென்பொருள் இயக்கங்கள் – அறிமுகம்
கட்டற்ற மென்பொருள் காலத்தின் கட்டாயம்! தமிழகத்துல இருக்கேன்! இங்கே
இதுக்கு ஏதாச்சும் வழியிருக்கான்னு கேக்கறீங்களா! ஏன் இல்லை!
அறியாதவற்கு இது ஒரு அறிமுகமாகட்டும்!
சென்னையிலும் தமிழகத்திலும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின்
கொள்கைகளையும் அது சார்ந்த தொழில் நுட்ப விஷயங்களையும் சிரமேற்கொண்டுள்ள குழுமம்.
கல்லூரிகளுக்குச் சென்று கட்டற்ற மென்பொருட்கள் குறித்த அறிமுக வகுப்புகளை நடத்துவது மாணவச் செல்வங்களுக்கு உறுதுணைபுரிவது முதலிய
பணிகளை ஆற்றிவருகின்றது! பெரும்பாலும் ஆங்கில வழி தான்! காலம் வழி காட்டும்!
மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
நேற்றிலிருந்து சென்னை எம்.ஐ.டியிலும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளது. இது மாதத்தின் நான்காவது சனிக்கிழமை தோறும் நடைபெறும். எப்.எஸ்.எப் னுடைய தமிழகப் பொறுப்பிலுள்ளவர்களும் இதில் அங்கம்.
மேலும் விவரங்களுக்கு: http://chennailug.org/
இது நம்ம சமாச்சாரம். கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்டு விநியோகிக்கப் படும் இயங்குதளங்களில் உபுண்டுவும் ஒன்று! “அனைவருக்கும் மானுடம்” என்பது இவ்வாப்பிரிக்கச் சொல்லின் பொருள்!
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகத் துவக்கப் பட்டு, தொழில்நுட்ப
விஷயங்களை மற்ற எல்லாவிஷயங்களைப் போல நம்மொழியில் பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபோட்டு வருகிறது. இதற்கு பொறுப்பாக
இருக்கின்றோம். மேலுமறிய: http://ubuntu-tam.org
கட்டற்ற மென்பொருள் குறித்த கலாமின் கனவினை நினைவாக்க அரசிடமிருந்து ஒரு முயற்சி! குரோம்பேட்டையில் எம்.ஐ.டி வளாகத்தில் இயங்கிவருகிறது!
எம்.ஐ.டி யின் முன்னாள் மாணாக்கரும், ஜாம் கிராக்கர் எனும் நிறுவனத்தை
நிறுவிய கே..பி. சந்திரசேகர் என்பவரது ஒத்துழைப்புடனும் அண்ணா
பல்கலைக் கழகத்தின் துணையுடன் இயங்கி வருகிறது!
சி.டி.ஏ.சி ன் மூலம் பாரத் ஆபரேடிங் சிஸ்டம் கொண்டு வந்தது இதன்
சிறப்பம்சம்! மாணாக்கருக்கு அவர்களது தொழில்நுட்ப ப்ராஜெக்ட் களில்
துணைபுரிவது, கட்டற்ற மென்பொருட்களில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது இதன் செயல்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது!
விவரங்களுக்கு: http://bosslinux.in/ & http://nrcfoss.org.in/
இது அரசாங்கமே பட்டையக் கிளப்பற விஷயம்! சும்மாச் சொல்லக் கூடாது 30000 கணினிகள்! எல்லாம் விண்டோஸ் இல்லாமன்னா சும்மா அதிருதில்ல!
அண்டாக்கா கசம்! அபூக்கா ஹுக்கும் திறந்திடு சூசே ! ஆம்! தமிழக அரசின் பஞ்சாயத்து முதலியத் தேவைக்களுக்காக சூசே குனு/ லினக்ஸ் வழங்கலின் முப்பதாயிரம் பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து அசத்தியது இந்நிறுவனம்!
அதோட சொன்னா மட்டும் போதாது செஞ்சும் காமிக்கறோமுனுட்டு தன்நிறுவனத்தின் அனைத்து தகவல்தொழில் நுட்பவளங்களையும் கட்டற்ற மென்பொருட்களால் கட்டமைத்துக் காட்டியுள்ளார்கள் இவர்கள்!
எல்லாத்துக்கும் மூளைக் காரணம் இதன் இயக்குநர் திரு. உமாசங்கர் இ.ஆ.ப அவர்கள்! இது குறித்த யூ.ட்யூபில் பதிவேற்றப் பட்டுள்ள பதிவொளித் தொகுப்பு: http://www.youtube.com/watch?v=3_g72GcaIdc
ஏன் ஆங்கிலத்துல மட்டும் இருக்குன்னு இன்னும் எனக்கு விளங்கல!
அப்பறம் என்ன? கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு எத்தனையோ இயங்கு தளங்கள் வந்து விட்டன. தாங்களும் முயற்சி செய்யலாமே!
http://chennailug.org/wiki/?title=CDs_for_Grab &
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_குறுவட்டுகள்_பெற
