ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for September, 2007

மென்விடுதலை நாள் விழாக்கள்

without comments

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

September 16th, 2007 at 9:52 pm

முறை செய்து காக்கும் மன்னன்…

with 5 comments

காமராசர் நல்லவர். நல்லாட்சி தந்தவர். எல்லாரும் இன்னிக்கு காமராசர் ஆட்சி வேணுமென்று கூவி கூவிச் சொல்றாங்க! காந்தி வழி நின்றவர்.

காந்தி தேசத் தந்தை. அவரை அப்படின்னு பேருக்காவது எல்லாரும் ஒத்துக்கறாங்க. காந்தி சொன்னார் நாம இராம இராஜ்யம் அமைக்க வேண்டுமென்று.

இராமர் யார்? கோசலத்தை ஆண்ட மன்னர். அவர் ஈசனை இராமேஸ்வரத்தில் வழிபட்டார். இலங்கை வேந்தனும் ஈசனின் பக்தன்தான். அவர் சமயம் என்ன? அவரே இறைவனொருவனை வழிப்பட்டிருக்கார்! அவரெப்படி இறைவனார்?

சரி.. இராமரை இன்று இந்த தேசத்தில் பலக் கோடிப் பேர் இறைவனாக வழிபடுகின்றனர். சரி.. அவர்கள் என்ன மதத்தைச் சார்ந்தவர்கள்?

பொதுவா உலகம் இன்னிக்கு ஒருத்தர் பின்னாடிப் போறத ஒரு மதம் ன்னு சொன்னா இராமரிட்டி அல்லதை இராமரிஸம் இப்படி ஏதாச்சும் தானே இருந்திருக்கும்.

ஆனா அவரை வழிபடுபவர்கள் அப்படி சொல்லிப்பது இல்லை! தங்களை எப்படி இந்த தேசத்தோடு அடையாளங்காட்டி கொள்கிறார்களோ அப்படியே இராமரையும் இந்த தேசத்து நாயகனாக காலங் காலமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு வேளை இவர்தான் தெய்வமென்றோ அல்லது இவர் சொன்னதை விட்டால் வேறு வழியில்லை என்றோ சிந்தித்திருந்தால் இன்னிக்கு உலகமே இராமரிட்டியையோ அல்லது இராமரிஸத்தையோ கடைபிடிச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்! அல்லது இவர் வழிபட்ட ஈசனை விட்ட வழியில்லை எனச் சொல்லும் ஈஸ்லாம் கூட வந்திருக்கலாம்…

ம்ம்ம்… அவர் இந்த பாரத தேசத்தின் ஒரு பகுதியாய் இருந்த கோசல நாட்டை ஆண்ட மன்னன். காமராசர் தமிழ் நாட்டினை ஆண்ட மாதிரி!

சரி.. அவர் முறை செய்து மக்களைக் காத்ததாக இராமாயணம் சொல்கிறது. அதனால இராம இராஜ்யம் அமைய வேண்டுமென்று காந்தி சொன்னார்.

முறை செய்து காத்ததால் வள்ளுவர் சொல்வது போல் அவர் மக்களால் இறையென்று வைக்கப் பட்டார். இதுலே மதமெங்கேர்ந்து வந்தது? நல்லாட்சி தந்த ஒரு மன்னன் இராமன். அவன் இந்த தேசத்தவன். அவன் காலடிச் சுவடுகள் இந்த தேசம் நெடுகிலும் பரவி நிற்கிறது!

இந்த தேசத்தின் தமிழகத்தை ஆண்ட காமராசர் எப்படி இந்த தேசத்தின் அனைத்து தரப்பினருக்கும் பொதுவோ அப்படித் தான் இராமரும். பலக் கோடிப் பேர் அவரை வழிபடுவதால் பிறர் அவரை கடவுளாகக் கருத வேண்டியக் கட்டாயமில்லை. தேசத்தை ஆண்ட ஆட்சியாளராகக் கருதலாமே! மரியாதைத் தரலாமே! காமராசர் மாதிரி!

இப்படி நம்ம நாட்டுல வெளிநாட்டுலேர்ந்து வந்த சரக்குகள் வருவதற்கு முன்னாடி இருந்ததெல்லாத்தையும், எல்லாரையும் சிலப் பேர், சிலப் பத்து ஆண்டுகளாக, ஒரு மதமா சுருட்டி மூட்டைக் கட்டி ஒத்திவைக்கணும்னோ மூடநம்பிக்கைன்னோ அவசியமில்லைன்னோ சொன்னா அதை அபத்தம் என்றுதான் சொல்லணும்.

இப்படி மதமுன்னு சொல்ற மொத்தக் கூட்டமும் கூட ஒருத்தர் பின்னாடி அல்லது ஒருத்தர் சொன்னது பின்னாடி தானே மதம் பிடிச்சு ஓடிக்கிட்டுருக்காங்க! உண்மையில் இவர்களுக்குத் தான் மதம். இவர்கள் தான் மதவாதிகள். இவர்களின் இயக்கங்களுக்கு மதம் என்ற பெயர் மிகப் பொருத்தமாய் இருக்கும்.

சரி… இலங்கைக்கு தன் மனைவியை மீட்க இம்மன்னன் தமிழகத்திலிருந்து பாலம் அமைத்தாக இராமாயணம் சொல்கிறது.

பாலமொன்று இடையே இருக்கிறது. அது இராமர் அமைத்ததா? இல்லை தானாக அமைந்ததா? ஆனால் பாலம் இருக்கிறது. இருந்ததைக் கூட அவர் பயன்படுத்தி இருக்கலாம்.. ஏன் கூடாது?

அவர் இருந்தாரா? என்றைக்கோ இருந்தாராங்கறதை விட இன்னிக்கும் அப்படியொருத்தர் பலக் கோடிப் பேர் இதயத்தில் நீங்காது இருக்காருங்கறது தான் முக்கியம்.

இப்படி ஆரம்பிச்சா எதுவுமே இல்லைன்னு சொல்லிடலாமே! வெறும் அறிவியல் தான் வாழ்க்கைன்னா நட்பு, உறவு, பாசம், காதல், பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி இதெல்லாம் மூடநம்பிக்கை! இதையெல்லாம் பத்தி சட்டமெதுக்கு!

இப்போது மேடுயர்த்த மத்திய அரசு படாத பாடு படுவது போல் அப்போது இருந்ததை அவர் மேடுயர்த்திக் கூட பயன்படுத்தியிருக்கலாம். இப்படி இன்னிக்கு பிரச்சனையாக்கப் பட்ட பாலத்தின் தொன்மையை யாரும் மறுக்கவில்லை.

தொன்மையான மட்பாண்டம், தொன்மையான எலும்புக் கூடு இவையெல்லாம் தொல்லியலுக்கு முக்கியம் தானே! தொன்மையான பாலம் ஆய்வுக்காவது முக்கியமென்று சொல்லியிருக்கலாம் தொல்லியல் துறை.

மாற்று வழிகள் இருக்குன்னு அத்தனைப் பேர் அடிச்சு சொல்றாங்க! அரசாங்கமும் இதை மறுக்கல… அப்பறம் ஏன் இந்த வெட்டிப் பொல்லாப்பு?

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

September 15th, 2007 at 9:16 pm

Posted in சமூகம்

கலைஞரும் கணபதியும்..

with 2 comments

அடடா இப்போ திடீர்னு தோணிச்சு. நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தி. நாளை கலைஞர் தொ. கா உதயம். எங்கேயோ இடிக்குதே!

    • Share/Bookmark

    Written by ஆமாச்சு

    September 14th, 2007 at 9:30 pm