ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for October, 2007

கற்றது தமிழ்…

with 2 comments

கற்றது தமிழ், தமிழ் எம் ஏ பார்த்துட்டு வரேன் :-)

கொஞ்சம் பின்னாடிப் போய்,

இதைப் பாருங்க : http://amachu.net/blog/?p=68 (நானும் இந்தத் துறை தான்
சாமியோவ்…) இதையும்: http://amachu.net/blog/?p=96

அரசாங்கத்துப் பொறுப்பிலிருக்கும் அரசியல் வாதிகளை வலியுறுத்தலாம்! ஆனால் பாவம்.. யார் தமிழர் எனக் கண்டு பிடிப்பதிலும், தமிழைக் காத்தது யார் எனப் போட்டிப் போடுவதிலும் அவர்கள் நேரம் போகிறது.. பதில் கிடைக்குதான்னு நானும் விவரம் அறிந்ததிலிருந்து கவனிச்சுட்டு வரேன்… நேர விரயம் தான் மிச்சம்.. ஆதித் தமிழர், பாதித் தமிழருன்னு பிரிச்சு, ஏற்கனவே இருக்கற நெருப்பில் எண்ணெய் ஊத்தி வளர்த்து குளிர் காய மட்டும் தெரியும்… ம்ம்ம்…

அதை விடுங்க! தமிழுக்கு ஆதாரம் தாய், தந்தை, தாத்தா, பாட்டி…
தாயே தமிழை தள்ளி வைக்கறதைப் பார்த்தாச்சு: http://amachu.net/blog/?p=4

ரொம்ப தூரத்துல இல்லை. எங்களில்லத்தின் கீழ்தளத்தில் :-)
அவங்க பிள்ளைக்கு என்னால வேலை கொடுக்க முடியாதே.. ;-) உங்களால? தமிழால? கையாலாகாத் தனம் அரசாங்கத்துக் கிட்டே மட்டுமில்லை..

அட.. இந்த ஒரு காரணத்துக்காக மாத்திரம் ஆங்கிலம் கத்துப்போம்.. தமிழில் இந்நிலைத் தோன்ற முயற்சி செய்வோம்.. ஆயிரமிருந்தாலும் நம்மத் தாய் மொழியாச்சே.. மத்ததுக்கெல்லாம்தான் தமிழ் இருக்கேன்னு இவங்களுக்கும் யோசிக்கத் தெரியலையா? முடியலையான்னு எனக்குத் தெரியல.. படிச்சுட்டாங்கப் பாருங்க…

அரசாட்சியா இருந்தா அரசாங்கத்தைக் கை காட்டிட வாய்ப்புண்டு.. நாம நம்மையே இல்ல ஆட்சி செய்துக்கிட்டிருக்கோம்.. மக்களாட்சி… மண்ணாங்கட்டி… பூமராங்…

“அறம் செய விரும்பு” சொல்லிக் கொடுக்க எத்தனைப் பேர் வீட்ல பாட்டி
இருக்காங்க? எல்லாம் கிண்டர் கார்டனில் ஏ பாஃர் ஆப்பிள் தான்…

சென்னை “தமிழ்”நாட்டின் தலைநகர்.. தூள்…

அறுபது வருஷம் ஆச்சு.. அரசியல் சாசனமே அதிகார பூர்வமா தமிழில்
இருக்கான்னுத் தெரியல.. நாட்டுல ஆட்சி இதை வச்சு நடக்குதாமுல்ல.. கான்ஸ்டிட்யூஷன்னு நாட்டுக்கு நடுப்பறப் போய் சொல்லிப் பாருங்க.. என்னக் கண்றாவின்னு பதில் கிடைக்கலனா ஆச்சரியம்…

எல்லாரும் மறுபடியும் மறுபடியும் ஒன்னு இராமாயணத்துக்கு/ குறளுக்கு/
தேவாரத்துக்கு/ பிரபந்தத்துக்கு இத்யாதிகளுக்கு இருக்கற உரையையே இப்படி
மாத்தி அப்படி மாத்தி, தங்களோடதையும் சேர்த்து எழுதறாங்க.. ம்ம்ம்..
இல்லைன்னா இராவணன், வாலி எட்சட்ரா இப்படி..

எட்டுத் திக்கும் இருக்கும் தமிழர்கள்.. கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்த்தாக வேண்டுமே!

800 களில் வட்டாரத்துக்கு பிரசவம் பார்க்க ஒரு மருத்துவச்சி இருந்தது
போய்.. ஆங்கிலம் தெரிஞ்சாத் தான்.. மருத்துவம் படிக்கலாம்.. அதைப்
படிச்சாத்தான் அங்கரிக்கப் பட்டு வைத்தியம் பார்க்கலாமுங்கற நிலை…
சரி அப்படியாச்சும் நிறைய மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு இருக்கான்னா..

இருக்கறது மூவாறு கல்லூரி.. வருஷத்திற்கு வெளி வரும் டாக்டர்கள்
ஆயிரத்துக்கும் அதிகம்.. பாதி பேர் வெளியேறிட.. பரமாச்சாரியார் போன்றோரின் புண்ணியத்தில் சில பத்ரி நாத் தங்கினா மகிழ்ச்சி…

289 மார்க் கட் ஆஃ்ப் வாங்கினவன் 290 மார்க் வாங்கினவனைக் காட்டிலும் திறமையில்லாதவன்னு சொல்லித் தள்ளிவிடும் தேர்வு முறை.. நானும் ரொம்ப யோசிச்சுக்கிட்டேயிருக்கேன் விடைக் கிடைக்கல! :-(

இவங்க எல்லாம் படிச்சு வந்துட்டாலும் இங்க வாழும் மக்களுக்காக உழைத்துக்
கொட்ட வாய்ப்புள்ளவர்கள்.. அய்யோ பாவம்.. இவங்களால அரசுக்கு வருவாய்
எதுவும் அதிகமில்லை… அந்நிய செலாவணியும் தான்.. அரசாங்க குறியே அதுலத்தான் இப்போ இருக்கு… இப்படி இருக்கறவங்கக் கிட்டேர்ந்து எப்படி?
அதனாலையோ என்னவோ மருத்துவக்கல்லூரிகளும் பெருகல..

மருத்துவர்களும் தான்.. உயர்வானத் தொழில் உழவுத் தொழிலுன்னு வள்ளுவர் சொன்னதெல்லாம் வயல் வரப்புலேயே குழித் தோண்டி புதைக்க வேண்டியதுதான்… பாடத்தில் குறள்கள் குறைந்தது பற்றி வருத்தம்தான்… குறள் நெறி நழுவுவது?
ஆனா வெளியிலிருப்பவர்களுக்கு உழைத்துக் கொட்டும் மஹா புருஷர்கள்…டாலர்
டாலடிக்குதுல்ல.. கத்தைக் காசு வரும்.. ஆஹா.. அற்புதம்.. வெள்ளிக் காசை அள்ளித் தருவதனால் வீணருக்கு உழைத்துடல் ஓய்வதைப் பற்றி அக்கறை என்ன? விளைவு 200+ பொறியியல்(?) கல்லூரிகள்.. வருட வெளியீடு இலட்சம் இருக்குமா? அந்நிய செலாவணி கைக்கு கிடைக்குமே… வேறென்ன வேணும்? எனக்குத் தெரிஞ்சு இந்த லிஸ்டல லேட்டா சேர்ந்த எத்தனைக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிகல், கெமிக்கல் இருக்குன்னுத் தெரியல..

பிள்ளைகளும் தமிழ் சிரமம்னு பதினோராவதுல பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம்
கத்துக்கறாங்க. இந்த மொழியெல்லாம் அத்தனாம் வகுப்புலதான் ஆரம்பப்
பாடமேங்கறதுனால எளிமையா மதிப்பெண் வாங்கலாங்கறதுனால…

இதையெல்லாம் என்ன செய்ய? முருகா!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

October 28th, 2007 at 10:45 pm

மண்கோட்டை…

without comments

கற்றது தமிழ் பார்க்கப் போலாமுன்னுத் துவங்கி மலைக்கோட்டைல போய் முடிஞ்சுது.

அப்படி ஏதாச்சும் புதுசா இருக்குமான்னு பார்த்தாக்க கில்லி, ரன் வரிசைல அடக்கமாயிடிச்சு.. பட்டுக்கோட்டைப் புயல் மலைக்கோட்டை மயிலை மையம் கொண்ட கதை..

காவல் துறைக் கண்காணிப்பாளர் கண்காணிக்கறது யாரைன்னு படத்த பார்த்து தெருஞ்சுக்கலாமே.. காக்காக் கதைக் கேட்டுட்டு காக்காப் பிடிக்க கிளம்பும் விஷால்..

கழட்டி விடலாமுன்னு அம்மணி வேற ஒருத்தறக் காட்ட அதுவே வம்பா திரும்புது.. மத்தபடி இதே மாதிரி யாரும் சென்னப் பட்டணம் எடுக்காம இருந்தா சரி!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

October 24th, 2007 at 2:59 pm

மாதம் மும்முறை பொழிகிறதா!

without comments

அன்று

அருள்மொழிவர்மன்: நம்பி! மக்கள் எல்லாரும் பசிப் பிணியின்றி நலமுடன் இருக்கிறார்களா? மக்களின் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் குறும்பர் கூட்டம் எதுவும் தலைத் தூக்குகிறதா?

நம்பி: தங்கள் ஆட்சியில் மக்கள் அனைவரும் எவ்வித அச்சமும் குறையுமின்றி அமைதியாக உள்ளனர் மன்னா! முறை செய்து காக்கும் தங்களின் ஆட்சி என்றென்றும் தொடர மக்கள் விரும்புகின்றனர்!

இன்று

மன்மோகன்: ஷிவ்ஜி! மாதம் மும்முறை குண்டு பொழிகிறதே! மக்கள் தொகை குறைந்து வருகிறதோ? இப்படியேப் போனால் அடுத்த முறையும் நாம் ஆட்சிக்கு வந்து விடலாமா?

ஷிவ்: ஓ! கடந்த மாதத்தினைச் சுற்றி மட்டும் ஹைதராபாத், அஜ்மீர், லூதியானா என மூன்று முக்கிய இடங்களில் குண்டு வெடித்து சில நூறு பேர் மட்டும் மடிந்துள்ளனர். இறந்தவர்கள் இனியெப்படியும் எழுந்து வந்து ஓட்டளிக்கப் போவதில்லை! இதை இப்படியேக் கண்டுக் காமல் கண்டித்து மட்டும் விட்டால் பல்லாயிரம் பேர் மடிந்தாலும் பல இலட்சம் ஓட்டுக்கள் கிட்டி தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம்.

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

October 16th, 2007 at 4:11 pm