Archive for January, 2008
குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு…
நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எல்லாரும் பறிக்கவொரு வாய்ப்பு!
தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்! திருட்டென புரிந்தும் போதைக்குள் புதையுண்டவராக திருந்த இயலாது நிற்போருக்கொரு மறுமலர்ச்சி!
குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிகு தொழில் முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழி காட்ட நாங்கள் செய்திருக்கும் இவ் வேற்பாடு!
என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு
அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு
எங்கே? எம் ஐ டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை
எப்போ? பிப்ரவரி 01, 02, 03
விசேஷம்? இது உங்களுக்கானது
விவரங்களுக்கு? http://fossconf.in
வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்!
அற்பனுக்கு வாழ்வு வந்தா..
இதுல கலந்து கிட்டு கை கால் முறிஞ்சு குடல் கிழிஞ்சி.. மூணு நாளு மாசம் எத்தனையோ இளைஞர்கள் அவதிக்குள்ளாகி அவங்க குடும்பத்தையும் கஷ்டப் படுத்தனுமான்னு சொன்னா ஏதோ உண்மையான அக்கறைல பேசறாங்கன்னு சொல்லலாம்..
மாட்டைக் கொடுமைப் படுத்தறாங்க! வாலைக் கடிக்கறாங்க! சாராயம் ஊத்தித் தராங்க அது இதுன்னு சுத்தி.. ஜல்லிக்கட்டுக்கு கூட்டா தடை கோரும் புளூ கிராஸ், பிராணி வதை தடுப்பு இயக்க மகாஜனங்களே!
தினந் தினம் ஊருக்கு ஊரு இலட்சக் கணக்கான கசாப்பு கடைகள், ஆடம்பர ஐந்து நட்சத்திர ஓட்டலகள், இங்கே எல்லாம் ஏதோ இறந்த பிராணிகளின் பிணத்தைக் கொண்டு வந்தா இறைச்சி தயாரிக்கறாங்க?
அமைப்பொன்னு யாரு ஏற்படுத்தினதுன்னு தெரியல! இருக்கறோமுன்னு காமிக்கணும்னா இப்படியா! அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த இராத்திரில கொடை பிடிப்பாங்கறது உண்மையாதான ஆச்சு!