ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for February, 2008

கட்டற்ற மென்பொருள் மாநாட்டுச் செய்திகள்

with 6 comments

முன்னேற்பாடுகள்:

மாநாட்டிற்கான திட்டமிடல் முன்னேற்பாடுகளை கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுமமும் செய்திருந்தன. எம் ஐ டி நிர்வாகம் இடந் தந்து ஒத்துழைப்பு நல்கியிருந்தது.

கடைகள்:

மதுரை தியாகராயா பொறியியல் கல்லூரி, சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி மாணவர்கள் கட்டற்ற மென்பொருட்களின் பல்வேறு தலைப்புகளில் கடை விரித்திருந்தனர்.

கட்டற்ற மென்பொருளைக் கொண்டு தங்களது கல்லூரி இறுதியாண்டு திட்டங்களை செய்யும் மாணாக்கரும் அவற்றைப் பிரதிபலிக்க வாய்ப்பளிக்கப் பட்டிருந்தது. இவை ஹாங்கர் எனப்படும் அரங்கில் நடைபெற்றது.

இம் மாநாட்டின் பிரதான ஆதரவாளர்களான எல்காட், சிடாக், சைலாஜிக், இன்டல், முதலியவற்றின் கடைகளும் இவற்றுள் அடங்கும். இதைத் தவிர கேட்போருக்கு கேட்கப் படும் வட்டினை பதிந்து கொடுக்கும் பொறுப்பினை உபுண்டு தமிழ் குழுமம் ஏற்றிருந்தது.

உரைகளும் பயிற்சி வகுப்புகளும்

இதைத் தவிர லெக்சர் ஹால் காம்ப்லக்ஸ் எனும் கட்டடத்தில் தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்திருந்த பலரும் உரை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். இதைத் தவிர துவக்க விழா நடைபெற்ற இராஜம் அரங்கில் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நமது பணி

கட்டற்ற கணிநுட்பமும் தமிழுலகும் எனும் தலைப்பில் எம்முடன் அருண், சிவா, நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் வுரையில் இதுவரை பலராலும் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ள பணிகள் மற்றும் தற்சமயம் நாம் மேற்கொண்டு வரும் பணி முதலியவைக் குறித்து கலந்து கொண்டோருக்கு எடுத்துச் சொல்லப் பட்டு பங்களிக்க வருமாறு அழைப்பும் விடுக்கப் பட்டது.

கட்டற்ற மென்பொருளும் தமிழுலகும் - நன்றி ஸ்ரீநிவாஸன் கட்டற்ற மென்பொருளும் தமிழுலகும் - நன்றி ஸ்ரீநிவாஸன்

இதைத் தவிர மேலே ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளது போல வேண்டுவோருக்கு வேண்டிய வட்டுக்களை பதிந்து கொடுக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தோம். இதில் நவாஸ், நரேஷ், சிவா, அருண் மற்றும் நாராயணன் துணைபுரிந்தனர்.

வட்டுக்கள் வாங்க வாங்க - நன்றி ஸ்ரீநிவாஸன் வட்டுக்கள் வாங்க வாங்க - நன்றி ஸ்ரீநிவாஸன்

கண் கவர்ந்தவை

  • தம்மாந் துண்டாக வெளியிடப் பட்டுள்ள ஹச் சி எல்லின் மைலீப் மடிக்கணினியில் உபுண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதை காட்டும் புனாவைச் சேர்ந்த அமித். மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெருசுங்க - நன்றி ஸ்ரீநிவாஸன்
  • மாணவர்களின் ஈடுபாடு மற்றும் பிரகடனத் திறன் மற்றும் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பலரும் பங்கு கொண்டமை.

நிறைவு நிகழ்ச்சி

நிறைவு நிகழ்ச்சிக்கு அபாச்சி அறக்கட்டளையின் நிறுவனரான பிரைன் பெஹ்லன்டுராப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அதற்கு முன்னதாக புவனுடன் இணைந்து மனிதர்களுக்கான வினாடி வினா நடத்தி பதிலளித்தோருக்கு உபுண்டு பேனா வழங்கினோம்.
மனிதர்களுக்கான வினாடி வினா

பங்கு பெற்ற மாணவர் திட்டங்களில் சிறந்த இரு திட்டத்திற்குப் பரிசளிக்கப் பட்டது.

நன்றி

என் ஆர் சி பாஃஸ் சார்பில் இம்மாநாட்டிற்காக உழைத்த பொன்னுசாமி, சௌமியா, பிரகாஷ், அகிலா, செல்வகுமார், மோகனபிரியா, நவாஸ், பவித்ரன் உள்ளிட்ட அனைவருக்கும் இதற்கு முன்னோடியாகத் திகழ்ந்து வழிநடத்திய சி என் கிருஷ்ணன், கென்னத், ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும், சென்னை லக்கின் இரயில்வேஸ் இராமன், மிடாஸ் பாரதி, பாலா, லூகாஸ் ஸ்ரீநிவாஸன், சைவாஜிக் விஜய், லைனஸ் அகாடமி சரவணன் மற்றும் மாஞ்சு மாஞ்சு உழைத்த பிரகதீஸ்வரன், சிவபாலன் உள்ளிட்ட எம்ஐடி மாணாக்கர் மற்றும் இவ்விடத்தில் குறிப்பிடப் படாத அத்துனை பேருக்கும் கலந்து கொண்டோருக்கும் இம்மாநாட்டின் வெற்றி காணிக்கையாகும்.

மேற்காட்டப் பட்டுள்ள படங்களுக்கு சென்னை லக்கின் லூகாஸ் ஸ்ரீநிவாஸனுக்கு நன்றி. மூன்று நாட்களில் அவர் எடுத்த மொத்தப் படங்களையும் பார்வையிட,

1) http://picasaweb.google.com/tshrinivasan/FossConfDayOne

2) http://picasaweb.google.com/tshrinivasan/FossConfDayTwo

3) http://picasaweb.google.com/tshrinivasan/FossConfDayThree

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

February 5th, 2008 at 2:28 pm