ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for April, 2008

ஜிபிஜி, க்யூடி, ஹார்டி

without comments

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 28th, 2008 at 10:50 am

எல்லையிற் கூடும் எதிரியர்தம் எண்ணிக்கை..

with 2 comments

நேபாளத்தில் மாவோயிஸ ஆட்சி மலர்கிறது. மாற்றம் இருப்பது என்றுமே சில சுயப் பரிசோதனைகளுக்கு நல்லதுதான். ஒரு தலைமுறை இவ்வாட்சி நீடித்திடின் இம்மக்கள் இதற்காக வருந்தலாம்.

விடுதலையடைவதாக எண்ணிக்கொண்டு விடுதலை பெற்றுத் தருவதாக போராடியோருக்கு அடிமைப்பட்டு போகும் இம்முறையை மலரச் செய்தமைக்கு. அப்படி ஆகாது என நல்லதையே நினைப்போம். ஆயுதம் தாங்கி பயங்கரம் புரிந்த பின்னும் மாவோயிஸ்டுகளுக்கு கிடைத்த கருத்து சுதந்தரம் இனி அவர்களை எதிர்ப்போருக்கு எப்படி கிடைக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம். காலம் பதில் சொல்ல காத்திருக்கிறேன்.

நிற்க.

ஏற்கனவே வங்காள தேசத்திலிருந்து அஸ்ஸாமுக்குள் பல இலட்சக்கணக்கில் ஊடுருவல். உல்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள். உள்நாட்டிலேயே சர்வதேச ஆதரவுடன் தலை விரித்தாடும் இசுலாமிய பயங்கரவாத குண்டுவைப்புகளும் விசுவாச சேர்க்கைகளும். போதாதக் குறைக்கு இங்கே தமிழகத்தில் வீசும் புலி வாசம். கஷ்மீர எல்லையில் சீன பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு.

இவை போதாதென்று தேசம் நெடுகே பரவிக் கிடக்கும் மாவோயிஸ நக்ஸலைட்டுகள். இவர்களுக்கும் இப்போ நேபாளத்தில் ஆட்சி அமைப்போருக்கும் தொடர்பே இல்லை என்றோ இவர்கள் எல்லாம் தனித் தனி மந்தைகள் என்றோ நினைத்திட வேண்டாம். எல்லாம் ஒரே சீனத்து விசுவாசிகள்.

ஆக சுற்றியிருக்கும் அண்டை நாடுகளில் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, இலங்கையிலிருந்து பயங்கரவாதம் பரவியது போக இப்போது நேபாளும் நேரடித் தாக்குதலில் இறங்கவுள்ளது. இச் செங்குறும்பர்களுக்கு செக்கிழுத்தாவது ஆட்சியில் நீடித்திட வேண்டுமெனும் நிலையில் மன மோகன மத்திய அரசு. இவர்களுக்கு நாட்டைச் சூழ நிற்கும் ஆபத்து அற்பந்தான்.

ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் நேபாளத்தில் ஆட்சியமைக்கின்றனர். அது அவர் வழியில் இங்கே ஆயுதமேந்துவோருக்கு பெரும் ஊக்கமே. உதவியும் இனி எளிதாகிப் போகும். மேலும் நேபாளம் கடந்திருந்த சீனாவின் எல்லை இப்போ நேபாளாகிவிட்டது என்றே கொள்ளலாம்.

ஒழுக்கமற்ற அரசியற் நிலவுவது இவர்களுக்கு இடப்படும் உரம். இதை இந்த அரசியற் வாதிகள் நிச்சயம் புரிந்து கொள்ள போவதில்லை. திருந்தவும் போவதில்லை இப்போதைக்கு.

இப்படி சுற்றி இருக்கும் சர்வ தேசமும் தாக்க நோக்கும் சூழ்நிலையில் இவற்றை எதிர்கொள்ள பாரதத்திற்கு ஒரு வழியுண்டு. அணி சேரமாட்டேன் அது இதுன்னு பேசி ரெண்டுங் கட்டான் நிலைமையெல்லாம் எடுக்காம நேடோவின் உறுப்பு நாடாவது.

இதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை. மாசம் என் பையில் சம்பளம். இன்பமாய் வாழவே நாங்கள் பிறந்தோம் என, பொழுது போக்க இவற்றை பேசிக்கொண்டு, உல்லாசமாய் வாழும் நிரந்தர சம்பள நடுத்தர மற்றும் வர்த்தக வர்க்கம். நானும் அதில் வெட்கமின்றி அடக்கம்.

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 15th, 2008 at 11:50 am

Posted in சமூகம்

அறிவிப்பு – கணிமொழி

without comments

கணிமொழியின் முதல் இதழ் ஆறு கட்டுரைகள் கொண்டதாக உங்கள் பார்வையில் தவழ்கிறது. முதல் மாத இதழான இதில் கணிமொழி அறிமுகம்(1), கணிச்சொற் விளக்கம்(2), திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்(3), ரெட் ஹாட் பொதி மேலாண்மை (4), அக்கம் பக்கம்(5), எம்பி3 கோப்புகள் இசைக்க(6) எனும் ஆறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதனை உருவாக்க ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் மேலான ஆதரவுடன் இது மென்மேலும் வளரும் என திடமாக நம்புகிறோம்.

கணிமொழியின் முதலிதழை வாசிக்க: http://kanimozhi.org.in

முதலிதழில்…

(1) கணிமொழி அறிமுகம்

கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள்.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html

(2) கணிச்சொற் விளக்கம்

நிரல் – குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/kanichor-vilakkam.html

(3) திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்

உரையாக்கம், அளிக்கைகள், விரிதாட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான ஒரு வடிவமென திறந்த ஆவண வடிவத்தைக் கொள்ளலாம். ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு முதலிய பயன்பாடுகள் இவ்வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/thirandha-aavana-vadiva-adharavu.html

(4) ரெட்ஹாட் பொதி மேலாண்மை

காலங்கள் செல்ல செல்ல ரெட் ஹாட் லினக்ஸ் மிகவும் பிரபலமடைந்துவிட்டது, இரண்டே வருடங்களில் சிலாக்வேர்(இதற்கு முன் பிரபலமடைந்த) லினக்ஸை முந்திவிட்டது. இந்த வெற்றிக்கு கண்டிப்பாக சில காரணங்கள் இருக்க வேண்டும், அதற்கு மிக முக்கியமான காரணம் ஆர்பிஎம் (ரெட் ஹாட் பொதி மேலாளர்) ஆகும்..

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/rpm-arimugam.html

(5) அக்கம் பக்கம்

லினக்ஸ் என்றாலே பலரது நினைவுக்கு வருவது இன்றும் ரெட்ஹாட்தான். குனு லின்க்ஸை வணிக ரீதியாகவும் வெற்றிபெறச் செய்ததில் ரெட்ஹாட்டின் பங்கு மிகப்பெரியது.

அத்தகைய ரெட்ஹாட்டால் ஊக்கமளிக்கப்பட்டு சமூகம் சார்ந்த முறையில் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான குனு லினக்ஸ் இயங்கு தளம் பெடோரா ஆகும்.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/akkam-pakkam.html

(6) எம்பி3 கோப்புகள் இசைக்க

எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.

தொடர்ந்து வாசிக்க: http://kanimozhi.org.in/01/01/mp3-koppugal.html

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 13th, 2008 at 8:18 am

Posted in குனு