Archive for August, 2009
இல்லறம் ஏற்கும் ஆமாச்சு :-)
வருகிற ஆவணி மாதம் ஏழாம் தேதி அதாவது ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு ஆமாச்சுக்கும் கிருத்திகா புவனேஸ்வரிக்கும் பெரியோர்களது நல்லாசிகளுடன் திருமணம் நடக்க இருக்கு.
இடம்: ஸ்ரீ பாரதி ராம் கல்யாண மண்டபம்
லேக் வியூ லோடு, மேற்கு மாம்பலம்,
சென்னை
முகூர்த்தம்: காலை 7.30 – 9.00
அட இன்னும் என்ன, வேறெந்த வேலையும் வச்சுக்காதீங்க. நாளை குறிச்சு வச்சுக்கிட்டு கட்டாயம் வந்துடுங்க.
பி.கு: அதே நாள் பிள்ளையார் சதுர்த்தியும் கூட.. என்னடா இப்படி ஆச்சேன்னு நினைக்க வேண்டாம். பிள்ளையாரே முருகனையும் வள்ளியையும் சேர்த்து வைக்க தன் வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு போனவர்தான். யாரையாச்சும் சோடி சேர்த்து வைக்க தன்னோட பக்தர்கள் போயிருக்காங்ன்னா அவங்களுக்கு தான் அவரோட பரிபூரண அருள்.