மணற்கேணி!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
குறுகத் தரித்த இதைக் குறளென்று சொல்லித்தான் தெரியணுமா!
சித்திரமும் கைப்பழக்கம்! செந்தமிழும் நாப்பழக்கம்! இப்படிக் கூட இதைச் சொல்லலாமே! அடடா! இதை சொல்லும் போது இன்னொரு பஞ்ச் டயலாக் ஞாபகத்துக்கு வருது!
எறும்பூறக் கல்லும் தேயும்… போதும்! நிறுத்துடா உன் மொக்கையன்னு நீங்க நினைக்கறது புரியுது!
ரொம்ப நாள் ஆசைங்க! இப்படி ஒரு வலைப் பதிவு துவங்கணும்னு.. முன்னாடி கொஞ்சங் காலம் ப்ளாக்ஸ்பாட்டில் வாசம் செய்ததுண்டு..அப்பறம் பல காரணங்களால விட்டுப் போச்சு! சரி பழச ஏன் கிளறணும்!
நிற்க! இந்த இணையம் வந்ததுல தான் எவ்வளவு சவுகரியம்! பெரிய பெரிய எழுத்தாளரா தங்களோட எதிர்காலத்துல வந்தவங்கக்கூட அவங்களோட ஆரம்பக்காலத்துல தங்கள் எழுத்துகள் வெளிவர பட்டபாடு பத்திநெறைய கேள்விப்பட்டிருக்கேன்…
பாருங்க! தொழில் நுட்பம் நமக்கு கொடுத்த வரம்! யாரையும் தேடிப்போல…நாம மாட்டுக்கு நம்ம சிந்தனைகளிலே சுரக்கறதை கொட்ட அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத ஒரு வாய்ப்பு…
இன்று ஊறத்துவங்கியுள்ளது எமது இந்த மணற்கேணி! தோண்டத் தோண்டத்தெரியும் கிடைப்பது தாமிரபரணி நீரா, அபுதாபி பெட்ரோலா, கிம்பர்லி வைரமா, கோலார் தங்கமா இல்லை நம்ம நெய்வேலி நிலக்கரியான்னு!