ஆமாச்சு

ஓர் அத்வைதி..

இதென்ன கூத்து?

without comments

ஜாவா தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. ஐபிஎம் சன்னை வாங்கப் போகிறது என்று செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென ஆன போது சற்றே பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.

இத்தகைய கும்பெனி உட்கொள்கைகள் (அக்யூசிஷன்) ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் – மாடாய் உழைத்து எல்லாம் தந்த தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது – தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன் கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கும்பனியை யார் நடத்தினால் என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஆரக்கிள் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம மென்பொருள் நிறுவனம். எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம் கீழே விளங்கும்) உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின் தரவுத் தள ஏக போக சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ எல் எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.

ஆரக்கிள் – ஜாவா – விண்டோஸ் – வெப்லாஜிக் என்றிருந்த பயன்பாட்டு உருவாக்க தனியுரிம உலக நெறியை தகர்த்த கூட்டணியாகும் குனு/ லினக்ஸ் – அபாச்சி- மை எஸ் க்யூ எல் – பி எச் பி.

சன் மைக்ரோசிஸ்டமும் ஒரு காலகட்டத்தில் தனியுரிம மென்பொருள் ஏகாதிபதியாக கொடி கட்டித் திகழ்ந்து பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் படைப்புகளை கட்டற்று செய்வதென முடிவு கொண்டது. இது கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து மை எஸ் க் யூ எல்லை விலைக்கும் வாங்கியது.

வரலாறு இப்படி இருக்க இன்றைய இச்சம்பவம் பல்வேறு வினாக்களை நம்முன்னே எழுப்பி நிற்கின்றது..

  • கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் – தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்?
  • ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் – கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் – வாங்கல் குற்றத்தின் காரணமான – தன்னை அது இழக்க நேரிடும் போது – அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும் உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும் உபுண்டு திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது – எனக்கு நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வியுமாகும் இது – ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)
  • இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக – கட்டற்ற தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச் சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?

இச்சம்பவத்திற்கே உரியதாக..

  • கடந்த சில வருடங்களாக சன் மைக்ரோசிஸ்டம் உலகளாவி மேற்கொண்டு வரும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் நிலை என்னவாகும்? அவற்றின் பிரதி ஆரக்களின் நிலைப்பாடு எப்படி அமையும்?
  • மை எஸ் க்யூ எல்லை சன் வாங்கியது.. சன்னை ஆரக்கிள் வாங்கியுள்ளது.. மை எஸ் க்யூ எல்லும் ஆரக்கிள்ளும் கோட்பாட்டு ரீதியாகவும் சரி – தொழில் ரீதியாகவும் எதிரெதிர் படைப்புகள். அப்படியிருக்க ஆரக்கள்ளிடம் விலை போய்விட்ட மை எஸ் க்யூ எல்லின் வருங்காலம் என்ன?

தொடரலாம்.. தூக்கம் தற்காலிகத் தடைபோடுகிறது..

தொடர்புடைய பதிவுகள்:

http://www.pluggd.in/technology/oracle-sun-acquisition-4027/
http://blogs.computerworld.com/oracle_sun_what_happens_to_mysql

Share and Enjoy:
  • Identi.ca
  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 20th, 2009 at 8:14 pm