இது தமிழியல்பு..
பொதுவா தமிழில் நான் கையெழுத்துப் போடுவதையும் எழுதுவதையும் காணும் பலர் ஏம்பா இவ்ளோ தமிழ்ப் பற்றான்னு கேக்கறதுண்டு. நேற்றைக்கும் துருபல் கூடுதலுக்குள் நுழையும் முன்னரும் இதேக் கேள்வி! சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருப்பின் இயல்பான விஷயங்களை தவிர்த்து விஷேஷமாக செய்வோம். வேதம், தேசிய கீதம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பல் மாநில, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்காகவும் வர்த்தகம் முதலிய காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் ஹிந்தி ஆங்கிலம் முதலிய பாஷைகள் கற்கிறோம்.
மற்றபடி நான் இயல்பாக இருப்பது கண்டு உலகம் வியப்பது விந்தைதான். சில பேர்கிட்ட மாதவியோட கோவலன் ஏன் போனான்னு கேட்டா ஏதாச்சும் காரணம் தேடலாம்.. கண்ணகி கூட ஏன் இருந்தான்னு கேட்டா நான் என்ன சொல்வேன்னு சொல்லிட்டேன்.
கடவுளே!
“மாதவியோட கோவலன் ஏன் போனான்னு கேட்டா ஏதாச்சும் காரணம் தேடலாம்.. கண்ணகி கூட ஏன் இருந்தான்னு கேட்டா நான் என்ன சொல்வேன்”
ராமதாஸ், ‘நச்’சென்ற வெளிப்பாடு(expression). இதுவரை நான் அறியாத உனக்குள் ஒருவன். அருமையான ஒருவன்.
கண்ணன், கும்பகோணம்.
கண்ணன்
29 Dec 09 at 7:25 am