ஆமாச்சு

ஓர் அத்வைதி..

நின்று நிலைத்திட நாம் விடலாமோ!

with 2 comments

தாயும் சேயும் பேசிடக் கேட்டேன்!
தமிழை விடுத்து வேறொரு பாஷை!!
ஏன் எனக் கேட்டேன்! எள்ளி நகையாடி
எக்காளமிட்டு ஏளனமாய் சொன்னாள்!

பரங்கியன் பாஷை பணம் தரவல்லது!
பைந்தமிழ் படித்தால் பரதேசிதான் என்றாள்!!
பணம் தான் பாரில் எல்லாம் என்றால்
பத்தினியும் பரத்தையும் ஒன்றே என்றேன்!

பதறிப் போனாள்! பதில் வரவில்லை!
பாவம் அவள் என்ன செய்வாள்!
பாரில் பலரின் பரிதாப நிலையிது!
பதவியும் பணமும் படுத்தும் பாடு!!

சரித்திரத்தின் சதிகாரர்களால் சிதைக்கப் பட்ட சிந்தனை!
சுதந்திரத்தின் சுவாசம் மறந்து சுகமாய் இருக்கிறது!!
சுயமாய் சிந்திக்கும் ஆற்றலிழந்தே!
சூழ நிற்கும் ஆபத்தை அறிய மறுக்கிறது!!

என்று மடியுமிந்த அடிமையின் மோகம் – என்றே
அன்று பாடிய பாரதியின் தாகம்!
இன்றும் இங்கே நீடிக்கின்றது – இது
நின்று நிலைத்திட நாம் விடலாமோ!

Share and Enjoy:
  • Identi.ca
  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 5th, 2007 at 8:27 pm

Posted in கவிதை?

2 Responses to 'நின்று நிலைத்திட நாம் விடலாமோ!'

Subscribe to comments with RSS or TrackBack to 'நின்று நிலைத்திட நாம் விடலாமோ!'.

  1. பரங்கியன் பாஷை பணம் தரவல்லது!
    பைந்தமிழ் படித்தால் பரதேசிதான் என்றாள்!!
    பணம் தான் பாரில் எல்லாம் என்றால்
    பத்தினியும் பரத்தையும் ஒன்றே என்றேன்!

    சரியான சாட்டையடி வரிகள்
    கற்பனைதான் என்றாலும்
    ஒரு குழந்தை வாயால் இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு தகுதியான தாய்மார்கள் இப்போது பலருண்டு நம் நாட்டில்
    அவர்கள் கொஞ்சமேனும்
    சிந்தித்தால் அவர்களும்வளமாவர் ,தமிழும் வளமாகும்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. என்று மடியுமிந்த அடிமையின் மோகம்!!!

    mangaimano

    27 Feb 09 at 4:21 pm

Leave a Reply