வணக்கம்,
உபுண்டு கோளரங்கம் பார்த்திருப்பீர்கள் : http://planet.ubuntu.com/
இதைப் போல் தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல். அதன் ஒரு சிரு முயற்சியாக விளைந்தது தான்: http://www.ubuntu-tam.org
தாங்கள் இதற்காக தனியாக எழுதணும்னு அவசியம் இல்லை.
நீங்க பயன்படுத்தி வரக்கூடிய blogspot, wordpress மாதிரி உள்ள வலைப்பதிவின் உபுண்டு/ குனு வகைப்படுத்தப் பட்ட rss feed முகவரியை, எமது amachu@ubuntu.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.
உங்கள் முகத்தின் படத்தினையும் (100X100) .png வடிவில் அனுப்ப மறக்காதீர்கள்.
உபுண்டு தமிழ் உலகிற்கு உங்களின் பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. தமிழில்…
தற்சமயம் இதனை எமது கணினியிலிருந்து தினசரி புதுப்பிக்கத் திட்டம். சிறிது காலம் சென்ற பின்னர் சுயமாக மாற்றங்கள் நிகழும் வண்ணம் செய்கிறோம். உங்கள் காலை நேரக் காபி இனி உபுண்டு தமிழ் உலகுடன் இருக்கட்டும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்! வாரீர்!

This is great! ஆனால் கோளரங்கத்தில் RSS ஓடையை காணோமே! அத்துடன் கோளரங்கம் என்ற பெயர் ரொம்ப அறிவியல்பூர்வமா இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பீஃலிங். உபுண்டு உலகம்னே வச்சுக்கலாமே. Anyway, I sincerely appreciate your initiative and the work you are doing.
இக்கோளரங்கத்தின் செய்தியோடைக்கான ஊற்று: http://www.ubuntu-tam.org/planet/rss20.xml
ஆமாச்சு,
எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. முகுந்தராஜ் அவர்கள் தமிழ்ப்பதிவுகள் (tamilblogs.com) என்ற தமிழ் வலை திரட்டியை நிருவியுள்ளார். அதன் செய்தியோடையில் குனு பற்றிய பதிப்பும் அவ்வபொழுது இடம் பெருகிறது. அந்த செய்தியோடையை யாகு குழாய் மூலம் கொடுத்து அதில் மேம்படுத்தி, குனு வடிகட்டியை நிறுவி ஒரு செய்தியோடையை நாம் எடுத்து, தமிழ் கோளரங்களுக்கு கொடுக்கலாம். நானும் எனது தமிழ் பக்கங்களில் இருந்து வரும் செய்தியோடையை கொடுக்கின்றேன்
செய்யலாம் பாலா. அதன் குனு வகைப் படுத்தப் பட்ட செய்தியோடைக்கான முகவரி மட்டும் தேவை என்று நினைக்கின்றேன்.