ஆமாச்சு

ஓர் அத்வைதி..

நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளலாமா?

with 2 comments

வெட்டி விஸ்டாவிஸ்டா எப்படி இருக்கும்னு உனக்கு தெரியுமா?

தெரியாது..

அதுல எவ்ளோ வசதியிருக்குன்னாவதுு தெரியுமா?

தெரிஞ்சுக்கணுமா என்ன?

அப்பறம் எப்படி அதை வெட்டி விஸ்டான்னு சொல்றே?

பாம்பை நீ கையில பிடிப்பியா?

அதெப்படி.. கடிச்சு விஷம் ஏறி செத்துடுவோமே!

அப்போ, பாம்பு இதுக்கு முன்னாடி உன்ன கடிச்சிருக்கு அப்படிதானே!

இல்லையே!

அப்போ எப்படி பாம்ப கையில புடிச்சாலே கடிச்சு விஷம் ஏறி செத்துடுவோமுன்னு சொன்ன?

சரிப்பா.. உருப்படியா ஏதாச்சும் ஒரு காரணத்தைச் சொல்லு நாங்களும் கேட்டுக்குவோமில்ல…

ம்ம்ம்… சரி…

இப்போ ஒரு கிலோ அரிசி வாங்கறீங்க… அது உங்களோடது இல்ல.. என்கிட்டேர்ந்து வாங்கினதுனால அதுல பிரியாணியத் தவிர வேற எதுவும் செஞ்சு சாப்பிடக் கூடாது உங்க கடைக்காரர் சொன்னார்னா என்ன செய்வீங்க!

அதெப்படி அவர் சொல்ல முடியும்.. காசு கொடுக்கற வரைக்கும் தான் பொருள் அவரோடது.. அதுக்கப்பறம்… என்னோடதாச்சே ! விட்ருவோமா!

சபாஷ்.. பைக் ஒன்னு வாங்கறீங்க.. அதுக்கு காலம் பூரா சர்வீஸ் எங்ககிட்ட தான் விடணும்னு சொல்றாங்கன்னா என்ன செய்வீங்க..

அதெப்படி ஒத்துக்க முடியும்.. வேணும்னா ஒரு வருஷம் விடலாம்.. சரி எனக்கும் அவருக்கு என்னிக்காச்சும் பொல்லாப்பு வந்துதுன்னா வேற ஒருத்தர் கிட்டே போயித்தானே ஆகணும்…

பலே! அப்படி வாங்க வழிக்கு.. விண்டோஸ் காரங்க அப்படிதாங்க சொல்றாங்க..அதான் அதை வெட்டி விடுவோம்னு சொல்றேன்..

இந்த மென்பொருளை தாங்கள் வாங்கவில்லை. இதனைப் பயன்படுத்தும் உரிமம் மட்டுமே உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மீதான அனைத்து உரிமங்களும் மைக்ரோசாப்டுக்கே. வேறுவகையிலான சட்டங்கள் உங்களுக்கு இதைப் பயன்படுத்துவதற்கு சிறப்பு சலுகைகள் வழங்கிடாத பட்சத்தில் இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டு இம்மென்பொருளைப் பயன்படுத்துவதற்குச் சம்மதிக்கின்றீகள்.

என்னப்பா ஏதோ மிரட்டறாப்ல இருக்கு! இப்படி எங்க சொல்லியிருக்கு!

விஸ்டா வழங்கப் படற உரிமத்துல!

இது தெரியாதே எனக்கு!

எல்லாம் இங்கிலீஷ்லயே இருந்தா என்னிக்கு தான் தெரிஞ்சுக்க போறோமோ போங்க!

ஆனா பாரு விஸ்டால இருக்கற சொகுசே தனி! அப்பறம் யாருப்பா இதைப்பத்தியெல்லாம் கலலைப் படறா! எல்லாம் ஓசிதானே! காசு கொடுத்து யாரு விண்டோஸ் வாங்கறா சொல்லு!

ஆமாண்ணே! ஒத்துக்கறேன்.. அடுத்த வேலைக்கு கஞ்சி இல்லாதவன் திருடலாம்.. அரசனா இருக்கறவன் திருடலாமா! விஸ்டாவ விட்டா வழியேயில்லனா விலைக் கொடுத்து வாங்குங்க!

ஒன்னா ரெண்டா! உபுண்டு மாதிரி எத்தனை கட்டற்ற ஓ.எஸ்! வாய்ப்பிருக்கும் போது வீணா விண்டோசெதுக்கு!

அப்போ விண்டோஸே கூடாதுங்கறியா!

ம்ம்ம்…எத்தனை பேரோட உழைப்பு இருக்கு அதுல.. அதெல்லாம் குனு பொதுமக்கள் உரிமம் மாதிரி ஒரு உரிமத்தின் கீழ் வந்தா யோசிக்கலாம்!

அதென்னப்பா குனு பொது மக்கள் உரிமம்?

இப்பொதானே ஆரம்பிச்சுருக்கேன்.. போக போக சொல்றேன்..

Share and Enjoy:
  • Identi.ca
  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 8th, 2007 at 7:14 pm

Posted in குனு

2 Responses to 'நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளலாமா?'

Subscribe to comments with RSS or TrackBack to 'நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளலாமா?'.

  1. இப்பதான் இதற்கு முன் போட்ட பதிவுகளை படித்துவிட்டு வந்தேன்.
    வானூர்தியில் பறப்பது பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனா எப்படியோ மேலே போய் கீழே பத்திரமாக இறங்கிவிட்டேன்.

    vaduvurkumar

    11 Jun 07 at 12:00 pm

  2. \\அப்போ, பாம்பு இதுக்கு முன்னாடி உன்ன கடிச்சிருக்கு அப்படிதானே!

    இல்லையே!

    அப்போ எப்படி பாம்ப கையில புடிச்சாலே கடிச்சு விஷம் ஏறி செத்துடுவோமுன்னு சொன்ன?\\

    நல்ல விளக்கம் :-)

    Snegethy

    13 Jun 07 at 10:53 pm

Leave a Reply