ஆமாச்சு

ஓர் அத்வைதி..

ஆமாச்சு?

with 10 comments

“ராமதாஸ்” – இதோட மழலை வடிவம் தாங்க ஆமாச்சு. இந்த “ரா” வும் “தா” வும் சின்ன வயசுல என்னால சரியா சொல்ல முடியாம ஆமாஸ்.. அது இதுன்னு சொல்லப் போய் பெரியவங்களும் என்னை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..

இது தான் பெயர்க் காரணம்.. என்னடா கோனார் தமிழுரை திருக்குறள் – பெயர்காரணம் மாதிரி சொல்றானேன்னு நினைக்காதீங்க.. எல்லாரும் கேக்கறது தான்.

எங்க அம்மா வேலைப் பார்த்த பள்ளிக் கூடத்து பெரிய டீச்சர் (தலைமை ஆசிரியை) இப்பவும் என்னை ஆமாச்சு அம்பின்னு தான் கூப்பிடுவாங்க! ;-)

நிற்க. பிறந்தது தமிழ் தாத்தா வாழ்ந்த குடந்த மாநகரம். பால பருவம் வள்ளலார் வாசம் செய்த வடலூர். அப்பறம் கும்பகோணத்துக்கே வந்தாச்சு.

சொந்த கிராமம் கும்பகோணத்துலேர்ந்து பதினேழு கி.மீ. பெயர் துகிலி.

ஜோசியம், ஜாதகம், பரிகாரம் இதுல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருந்துச்சுன்னா கஞ்சனூர் கேள்விப் பட்டிருப்பீங்க. சுக்கிரனுக்கான கோவில் இருக்கும் கிராமம். அதுக்கு அடுத்த கிராமம் எங்களது.

தாய் தந்த மொழியால் தமிழன். வாழும் தேசத்தால் ஹிந்து. இவ்விரண்டிலும் பெருமையும் பூரிப்பும் எமக்கு உண்டு. பிறவிப் பெருங்கடலை நீந்திட எம் நாட்டவர் காட்டிய/ காட்டும் பல வழிகளில் எம் குணத்திற்கு ஏற்றவொன்றை தேர அவ்வப் போது பலவற்றை அறிந்தும் ஆராய்ந்தும் வருபவன்.

அதில் திருப்தி ஏற்படும் என்றே நம்பிக்கை. இல்லையெனில் எமக்கென வழியமைத்துக் கொள்ளவும் எம் பண்பாட்டில் வழியுண்டு. இப்படி இதுதான் வழியென பின்செல்ல சொல்லாது இப்படியொரு சுதந்தரத்தை வழங்கிட்ட பூமியின் புத்திரனாவதில் அகமகிழ்ச்சி கொள்பவன்.

வயத்து பொழப்புக்காக சென்னை வாசம். அப்பா தமிழாசிரியர். அம்மா ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியையா இருந்தாங்க. தஞ்சை ஷண்முகா பொறியியல் கல்லூரியில், மின்னணுவியலில் பட்டம் பெற்று, சென்னைக்கு வந்த புதிதில் பிணையச் சேவைகள் செய்து தரும் நிறுவனமொன்றின் பறைசாற்றும் துறையில் பணியமர்ந்தோம்!

அதைத் தொடர்ந்து இரண்டு வருடத்துக்கும் மேலாக மென்பொருள் நிறுவனமொன்றில் வாசம்! விடுதலை விரும்பி விடைபெற்றவனைத் தற்போது சென்னை என்.ஆர்.சி.பாஃஸ் தத்தெடுத்துள்ளது! கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையம் இதன் தமிழாக்கம்.
திட்டப் பொறியாளராக பொறுப்பாற்றி வருகிறேன்! நோக்கம் திறந்த மற்றும் கட்டற்ற மென்பொருள் வளத்தை நாட்டின் மேம்பாட்டிற்காக இனங்கண்டுக் கொடுப்பது!

உபுண்டு தமிழ் குழுமத்தினைத் துவங்கி அதன் பொறுப்பாற்றி வருகிறோம். குனு இணைய தளப் பக்கங்களைத் தமிழாக்கவும் பொறுப் பேற்றிருக்கிறோம்!

வாழ வாழ வரைகிறேன்.. இப்போதைக்கு விடைப் பெறுகிறேன்!

Share and Enjoy:
  • Identi.ca
  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 3rd, 2007 at 11:56 am

Posted in

10 Responses to 'ஆமாச்சு?'

Subscribe to comments with RSS or TrackBack to 'ஆமாச்சு?'.

  1. Good work!!! friend… Keep it up.. Soon I will join with you.. I am also doing some sort of work on Tamil hoping to release it soon..

    Please mail me… I will send you personnel note about my work..

    Mohan

    18 Jul 07 at 9:17 pm

  2. உங்கள் பெயர்க் காரணம்
    இயல்பாக இருக்கிறது
    இணைவோம்
    தமிழ் வளர்ப்போம்

    அன்புடன்
    தமிழ்த் தேனீ
    http://thamizthenee.blogspot.com

    Thamizth Thenee

    10 Aug 07 at 1:45 pm

  3. அன்புள்ள ராமதாஸ்
    உன்னுடைய வயதுக்கு நீ எடுதுக்கொன்டுள்ள பொறுப்பு ஒப்பற்றது. ஆனால் இந்த்த வயதில்தான் வாழ்க்கையில் சில குறிக்கொள்களை மேற்கொன்டு திறமையுடன் செயல்படுத்த முடிடயும்.
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் கமலா

    kamala

    19 Sep 07 at 4:27 pm

  4. நானும் தமிழுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன். வழிகாட்டுங்கள் தோழா…

    கனகராசு

    3 Oct 07 at 11:26 am

  5. குனு பதிவில் இருந்துதான் இந்த பக்கத்திற்கு வந்தேன். உபுண்டு மேல் எனக்கு தனி ஆர்வம். நம் அரசாங்கத்தில் கட்டற்ற மென்பொருளுக்காக தனி மையம் செயல்படுவது அறிந்து வியப்புற்றேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். என்னாலான உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன்.

  6. ஒரு அத்வைதியின் குறிப்புகளைப் படித்து பேரானந்தம் அடைந்தேன்!
    உமது முயற்சிகள் முழுமையான பயன் அளிக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

    ksbalaji

    22 Apr 09 at 7:18 pm

  7. வருகை புரிந்தமைக்கும் தங்கள் பிரார்த்தனைகளுக்கும் நன்றி பாலாஜி.

    ஆமாச்சு

    3 May 09 at 7:41 pm

  8. நண்பா! அத்வைதியின் பொருள் என்னவோ?
    வலையில் தேடினேன் Non-Dualism என்ற பொருள் கிடைத்தது. சரியா?

  9. Hai Iam vijayanand, collegemate Shanmugha from Mayiladuthurai, send me your mobile number, I want to talk about FreedomToaster project. as soon as posiible.

    Vijayanand

    4 Sep 09 at 1:12 am

  10. hello we ie ammalu athai balumama meenaa and raja from vellore earnestly await your visit here

    balu

    9 Dec 09 at 11:50 pm

Leave a Reply